Tamil Islamic Media ::: PRINT
மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!

காமக்கொடூரன்களால் கற்பிழந்து நிற்கும் அபலை பெண்களுக்கு இம்மடலை சமர்ப்பிக்கிறேன்.

பெண்ணுரிமை பற்றி அதிகம் பேசும் நமது நாட்டில்  தற்போது பெண்களின் கற்பு ஆண் கயவர்களால் அதிகம் சூறையாடப்பட்டுவருவது வேதனைக்குரியதாகும்.

சில நேரங்களில் கற்பழிக்கப்பட்ட பெண்களை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பி விடுகின்றனர்.

இது போன்ற நிகழ்வுகள் இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாகவே நடந்து வந்த போதிலும் தற்போது இதனுடைய வீரியம் அதாவது பெண்கள் கற்பழிக்கப்ப்டும் துயர நிகழ்வுகள் ஆங்காங்கே புற்றீசல் போல கிளம்பியுள்ளதையும் அதிலும் ஒழுங்கீனமான வாழ்க்கையை நவநாகரீகம் என்ற பெயரில் கடை பிடித்து வரும் மேலை நாடுகளில் கூட நடக்காத அளவுக்கு நமது இந்திய தேசத்தில் அதிகமாகி விட்டதே என்ற வேதனையின் வெளிப்பாடே இந்த கட்டுரை!

இதுபோன்ற சம்பவங்களுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் முதல் காரணம் மதுப்பழக்கம் இரண்டாவது காதல் என்ற தகவலே வழக்குப்பதிவு செய்யும் காவல் துறையினரால் கூறப்படுகிறது.

மதுவிற்க்கு அடிமையான மனித வடிவிலான மிருகங்கள் தங்களது வாழ்க்கைப்பற்றியோ,அல்லது மற்றவர்களின் வாழ்க்கையை பற்றியோ அக்கறை இல்லாதவர்கள்.

காரணம் அவர்களது சிந்திக்கும் திறனை ஆல்கஹால் என்னும் கொடிய விஷம் அழித்து விடுகிறது இது போன்ற குடிகாரன்களுக்கு தாய் யார்?தாரம் யார்? சகோதரி யார்?மகள் யார்?என்ற பாகுபாடு எதுவும் தெரிவதில்லை. 

மொத்தத்தில் பெண்ணாக இருந்தால் போதும் ஆசையை தீர்த்துக்கொள்ளலாம் என்கிற மிருகத்தின் புத்தியே மேலோங்கி நிற்கும்.அதன் விளைவே சமீபகால ஊடகங்களில் பதிவாகி வரும் கற்பழிப்பு நிகழ்வுகள்.

2012 டிசம்பர் இறுதி வாரத்தில் மட்டுமே எத்தனை சம்பவங்கள் என்பதை நினைத்துப் பார்த்தாலே இதயம் வெடித்து விடும் போலிருக்கிறது.

கடந்த டிசம்பர் 16 ந்தேதி தேசத்தின் தலைநகர் டில்லியில் ஓடும் பஸ்ஸில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ கல்லூரி மாணவி கொடூரமாக கற்பழிக்கப்பட்டு ஓடும் பேரூந்திலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.(குறிப்பு)இந்த மாணவி டிசம்பர் 30 ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

20 ந்தேதி தூத்துக்குடியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 13வயதான 7 ம் வகுப்பு மாணவி சுப்பையா என்ற காமக்கொடூரனால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.(குறிப்பு)சுப்பையா மதுவிற்க்கு அடிமையான மனித வடிவிலான மிருகம்.

  டிசம்பர் 24 ந்தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் வீட்டில் இருந்த 18 வயது பெண்ணை பேரூந்து ஓட்டுனர் ஒருவரும் அவனின் நண்பனும் தூக்கிச்சென்று கற்பழித்துள்ளனர்.

24 ந்தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பஸ்நிலையத்தில் இரவு 9 மணியளவில் ஒரு பெண் அழுதபடி வந்துள்ளார் பொதுமக்கள் விசாரித்த போது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தனது காதலனின் கண்முன்னே தன் துப்பட்டாவால் கட்டிப்போடப்பட்டு தன்னை 4 பேர் கற்பழித்ததாக கூறியுள்ளார்.

(குறிப்பு)இரவு நேரத்தில் காதலனுடன் இருந்த பெண்ணை ஒழுங்கீனமானவள் என்ற பார்வையில் கயவர்கள் கற்பழித்துள்ளனர்.

இதே நாளில் குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் நேபாளத்தை சேர்ந்தவர்களின் 2 வயது குழந்தை   சொந்த தாய் மாமனால் கற்பழிக்கப்பட்டு இறந்து போனது.

இதே நாளில் மும்பை பாந்த்ரா கல்லூரி ஒன்றில் படித்து வந்த 19 வயது மாணவியை அவருடன்  படிக்கும் மாணவர் ஒருவர் காதலிக்க மறுத்த காரணத்தால் மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டா

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.