Tamil Islamic Media ::: PRINT
அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்

அதிகாலை ஆண்கள்

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையைநிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.  வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.  

ரமளான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின் போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த பள்ளிவாசல்களைக் கட்டினோம்..?

 நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா அல்லாஹ்!எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!” (அபூதாவூத்)  அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும்இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம்இருக்கின்றது.  ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்-தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்: “அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.” (பைஹகீ)

 ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள்.

 அல்லாஹ்வை இறைவன் என்று ஏற்றுக்கொண்டிருக்கும் நாம் எவ்வளவு தூரம் அல்லாஹ்வின் ரிஸ்கை அலட்சியம் செய்கின்றோம்..பாருங்கள்!

 அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்: “படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான். வானவர்களிடம் கேட்கின்றான்:“வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்..! படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..?என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனதுதண்டனையைப் பயந்தா…?” பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்:“உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.” (அஹ்மத்)

 அதிகாலை நேரத்தில் சூரியன் உதிக்கும்வரை தூங்குபவர்கள் அல்லாஹ்வின்அருளையும், பாதுகாப்பையும் அலட்சியம் செய்யும் மக்கள் அல்லவா..? அல்லாஹ்வின் பாதுகாப்பையே அலட்சியம் செய்பவர்களுக்கு, ஷைத்-தான் அல்லாமல் வேறு யார்தான் பாதுகாவலனாக இருக்க முடியும்?

 ஆனால், மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள்.. உலகம் எப்படி மாறினாலும் சரி, மக்கள் அனைவரும் எப்படிப் போனாலும் சரி, தொலைக்காட்சியில் எவ்வளவு முக்கிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினாலும் சரி… மனதில் ஸுபுஹ் தொழுகையைநினைத்த வண்ணமே படுக்கைக்குச் செல்வார்கள். அவ்வண்ணமே அதிகாலையில்எழுவார்கள். அவர்கள்தாம் உண்மையான இ

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.