Tamil Islamic Media ::: PRINT
ஒற்றைச்செறுப்பு

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்

“ உங்களில் ஒருவரின் செருப்பின் வார் அறுந்துவிட்டால் அதை சரி செய்யும் வரை மற்றொரு செருப்பில் மட்டும் நடக்கவேண்டாம்” (முஸ்லிம்)

ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் ரோல் மாடலாக நபி (ஸல்) தவிர வேறு ஒரு மனிதர் நிச்சயமாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது, மற்ற யாரெல்லாம் உலகாதாய நோக்கத்திற்கு மற்றவர்களை ரோல் மாடலாக்கிக்கொள்கிறார்களோ அவர்கள் அந்தந்த துறையில் மட்டும் தான் சிறப்புற்றிருப்பார்கள் ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஆன்மிகத்திலிருந்து அறிவியல் வரையும் சரித்திரத்திலிருந்து சமையலறை வரை வழிகாட்டிய ஒரே தலைவர் நபியவர்கள்.

கிட்டதட்ட 1400 ஆண்டுகளுக்கு முன் செருப்பு அணிந்து நடப்பவர்களை தேடிப்பிடிக்கவேண்டிய காலத்தில், செருப்பு அணிந்து நடப்பது குறித்தும், ஒரு செருப்பு அணிந்து நடக்கவேண்டாம் என்று பேசுவது எவ்வளவு பெரிய முன்னேற்றம். எவ்வளவு பெரிய கலாச்சார வார்த்தை.

பெருமானாரின் போதனைகள் எல்லா காலத்திற்கும் பொருந்துவதாக அமைந்திருக்கும். இன்னும், உலகில் எப்பொருளானாலும் அநீதம் கூடாது என்று போதித்தவர்கள் நபியவர்கள். செறுப்பு போடுகிற விஷயத்திலும் இதுவே அளவுகோள் முன்னிறுத்தப்படுகிறது.

இதன் தொடராக இன்னொரு ஹதீஸிலே நபியவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவன் ஒரு செறுப்பு அணிந்து நடக்கவேண்டாம், அணிந்தால் முழுமையாக (இரண்டையும்) அணியட்டும் அல்லது முழுமையாக (இரண்டையும்) கழைந்துவிடட்டும்.

இன்னும் ஒரு ஹதீஸில் நின்று கொண்டு செறுப்பு அணிய வேண்டாம் அமர்ந்து கொண்டு அணியட்டும் என்றும் அறிவுறித்தியுள்ளார்கள். ஏனெனில் அந்த காலங்களில் அணிந்த செறுப்புகள் நம் இன்றும் அணியும் ஷு போன்ற நிலையில் உள்ளது. ஆகையால், அதை அணியும் போது நின்று கொண்டு அணிந்தால் அணிபவருக்கு சிரமம் ஏற்படும் என்ற அடிப்படையில் அறிவுறித்தினார்கள். இந்த தடை நாம் இன்று பயன்படுத்தும் செறுப்புக்கு அல்ல என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

செறுப்பு அணியும் ஒழுக்கத்தை கூட நமக்கு சொல்லிக்கொடுத்த எப்பொருமான எத்துணை அற்புதமானவர்கள். நம்மீது எத்துணை அக்கறையோடு வழிகாட்டியுள்ளார்கள். ஆகையால், இறைவன் குறிப்படுவது போன்று நபியவர்கள் நம் உயிரை விட நமக்கு மேலானவர்கள்.

அவர்கள் மீது எவரும் கலங்கம் கற்பிக்க நினைத்தால் நம் உயிரைக்கொண்டு அந்த கலங்கத்தை ஒரு முஸ்லிம் துடைத்தெடுக்க தயங்கமாட்டான்.

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.