Tamil Islamic Media ::: PRINT
மஸ்ஜித் (பள்ளிவாசல்)


ரஹ்மத் என்பது அல்லாஹ்வுக்கு சொந்தமான ஒன்று ஆகும். அதற்கு பொருள் அருள், கிருபை,கருணை என்று வைத்துக் கொள்ளலாம், மற்றொரு பொருள் அது (creativity) படைப்பின் மூலம் என்பதாகும்.காரணம் 'ரஹ்மு' என்ற மூலச் சொல்லிருந்துதான் 'ரஹ்மத்' உண்டானது.ரஹ்மு என்பது 'கருவறை' என்று பொருள்.இதற்கு இன்னொரு அர்த்தம் உண்டு. ரஹ்மு என்றால் 'இரத்த உறவு' என்றும் பொருள் உண்டு. கருவறையை மையமாக வைத்து இரத்த உறவு உண்டாவதால் மேற்கண்ட பொருள் உண்டானது. கருஉருவாகவும், இரத்த உறவுக்கும் அடிப்படையாக கருணையும், கிருபையும் இருப்பதால் அதற்கு ரஹ்மத் என்றும் பெயர் வந்தது.படைப்பின் மூலமாக 'ரஹ்மத்' இருப்பதால் அதன் மூலம் உண்டான படைப்பினங்களுக்கு கருணை புரிவதற்காக அல்லாஹ் தன் பெயராக 'ரஹ்மான்' என்றும் 'ரஹீம்' என்று பெயர் சூட்டிக் கொண்டான்.

                          ரஹ்மானாகிய அல்லாஹ் தன் ரஹ்மத்தை நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பூர்த்தியாக்கி வைத்தான். அதாவது அவர்களை அல்லாஹ் தன் ரஹ்மத்தாகவே ஆக்கிவிட்டான். அந்த ரஹ்மத்தை கொண்டே ஆலங்களைப் படைத்தான்.
                       
                               ரஹ்மானின் படைப்பின் துவக்கமே ஆலங்களின் ரஹ்மத்தாகிய கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கிறார்கள். தன் ரஹ்மத்தாகவே தன் நேசரை ஆக்கினாலும் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் எந்த குறையும் ஏற்படவில்லை. மனிதர்கள் மீது அல்லாஹ் ரஹ்மத்தை பொழிகின்றான். அகில உலக மக்களுக்கும், படைப்பினங்களுக்கும் ரஹ்மத்தாக  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆக்கி அல்லாஹ் அழகு பார்த்தான் . அந்த வகையில் நாம் ரஹ்மத் செய்யப்பட்டு இருக்கிறோமா? ஆதம் (அலை) அவர்கள் முதுகுத் தண்டில் படைத்ததே அவன் புரிந்த முதல் ரஹ்மத் ஆகும்.
                     
                             அந்த ஆன்மாக்கள் தலைமுறை தலைமுறையாக தந்தைகளின் முதுகுத் தண்டில் பயணித்து, இன்று உலகில் பிறந்து இருக்கிறோமே, இதுவும் அவன் புரிந்த மாபெரும் ரஹ்மத் ஆகும். காரணம் தலைமுறை இடையில் அழிந்து போகாமல் இருக்கச் செய்து நம்மை பாதுகாத்ததானே, அது ரஹ்மான் நமக்குப் புரிந்த ரஹ்மத் ஆகும்.

                          பின்பு கருணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மத்தாக நம்மை ரஹ்மான் ஆக்கி அருள்புரிந்தானே அது அல்லாஹ் நமக்கு செய்த மகத்தான ரஹ்மத்தாகும். இவ்வாறாக ரஹ்மான் நம்மில் புரிந்த ரஹ்மத் மாபெரும் கிருபையாக உள்ளது. நாம் வாழும் காலங்களில் அல்லாஹ்விடம் ரஹ்மத்தை கேட்கின்றோம். காரணம் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அல்லாஹ்வின் ரஹ்மத் நமக்கு அவசியமாகிறது. அதனால் அல்லாஹ் தன்னிடம் ரஹ்மத்தை ஒவ்வொரு அடியானும் கேட்க வேண்டும் எனச் சொல்கின்றான்.
                        
                         அல்லாஹ்வின் ரஹ்மத்தை நாமாகவே பெற்றுக்கொள்ள முடியாதா? ஏன் முடியாது. இருக்கவே இருக்கிறார்கள் நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஆம் அவர்கள் நாம் பற்றி பிடித்துக் கொண்டால் போதும், நாம் ரஹ்மத் செய்யப்பட்டவர்களாகி விடுவோம். அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கு உள்ளார்கள் நாம் பற்றி பிடித்துக்கொள்

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.