Tamil Islamic Media ::: PRINT
இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!

முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது. இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை. இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான். இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.

ஒருகால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை. நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் படையெடுப்பாளர்களாக போதிக்கப்படுகிறார்கள். எனினும் படையெடுப்பென்பது அன்றைய நியதி என்பதையும், அப்படி படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டார்கள் என்பதையும், இவர்களில் பலர் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள் என்பதையும், இவர்கள் எப்பகுதியிலிருந்து வந்தார்களோ அப்பகுதிகளை இவர்களின் எதிரிகள் கைப்பற்றி விட்டதால் அவை இவர்களின் எதிரி நாடுகள் ஆகிவிட்டன என்பதையும், இவர்கள் அவற்றோடு போரிட்டார்கள் என்பதையும், இவர்கள் இங்குள்ள செல்வத்தை (ஆங்கிலேயர் போல) தங்கள் மூதாதையர் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை என்பதையும், இங்குள்ள செல்வத்தை இந்நாட்டின் வளத்திற்கே உபயோகித்தார்கள் என்பதையும், இவர்கள் இங்கிருந்த பிற மன்னர்களை வென்றது தான் நாட்டின் ஒருங்கிணைப்பை கொண்டு வந்தது என்பதும் சொல்லப்படுவதில்லை.

ஆம். கோரி முகம்மது கூர்ஜர – பிரதீஹரர்கள் நாட்டை, கன்னோசி நாட்டை வென்றது படையெடுப்பாக சொல்லப்படுகிறதேயல்லால், அதனால் கூர்ஜர பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு என்பது மறைந்து டெல்லியை தலைநகராகக் கொண்ட அரசோடு அவை இணைந்து இந்தியா என்றொரு நாடு உருவாக அவர் வித்திட்டார் என சொல்லப் படுவதில்லை. அவ்வாறே இல்டுட்மிஷ் ஒரு படையெடுப்பாளனாக சொல்லப் படுகிறாரேயல்லாமல் டெல்லி பேரரசிற்கு அப்பால் இருந்த பகுதிகளை வென்று இந்திய டெல்லி பேரரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர் என்பதும் சொல்லப்படுவதில்லை. அவ்வாறே அலாவுதீன் கில்ஜியும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஆப்கானிஸ்தான் முதல் வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஒவ்வொன்றாக வென்று டெல்லியை தலைநகராகக் கொண்ட இந்திய அரசோடு இணைத்து, தன் ஆட்சியின் கீழ் ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி கொண்ட இந்தியா என்று திகழச் செய்தவர். எனினும் முஸ்லிம்கள் படையெடுப்பாளர்கள் என்று பாட நூல்கள் கூறுகின்றனவேயல்லால் அவர்கள் தங்கள் ரத்தம் சிந்தி, சிறிதும் பெரிதுமான நாடுகளை வென்று, மத்திய அரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியா

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.