Tamil Islamic Media ::: PRINT
நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....

நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர் நபியின் மஸ்ஜிதில் அமர்ந்துத் தேம்பி தேம்பி அழுதார்

இந்த ஆண்டு (2013) ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஹோலன்ட் நாட்டைச் சார்ந்த அர்னோல்ட் என்பவர் இவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார் இவர் நபிகள் நாயகத்தை வசைபாடும் விதமாகத் திரைபடம் தயாரித்து வெளியிட்டு அதனால் முஸ்லிம்களின் எதிர்ப்பிற்கும் கோபத்திரற்கும் உள்ளானவர்.


Arnoud Van Doorn (extreme left), former leader of the Dutch rightist Freedom Party, prays at the Prophet’s Mosque in Madinah. — Okaz photo

 முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்ட பிறகு அவர் சிந்திக்கத் தொடங்கினார் முஹம்மது நபியைப் பார்க்காத நிலையிலும் அவர் இறைவனடி சேர்ந்து 1400 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவரின் மீது அளவற்ற அன்போடு இன்னமும் முஸ்லிம் சமுதாயம் உள்ளதே அஃது ஏன்? என்ற கேள்விக்கு விடை தேடி நபிகள் நாயகத்தைப் பற்றிப் படிக்கத் தொடங்கினார்.  

படித்து முடித்த பிறகு அவர் செய்தத் தவற்றை உணர்ந்துத் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார் அவர் மக்கமா நகரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பின் வருமாறு கூறினார் இந்த மண்ணில் கால் பதித்த திலிருந்து நான் அழுது கொண்டே இருக்கிறேன் அழுதுப் புலம்பி எனது இறைவனிடம் நான் செய்தத் தவறுக்கு மன்னிப்புக் கோருகிறேன் நபிகள் நாயகத்தை வசைபாடித் திரைபடம் எடுத்த குற்றத்திற்கு மன்னிப்புக் கோரியே நான் இங்கு வந்துள்ளேன் இப்படிக் கூறிய அவர் எந்த நபியை வசைபாடிப் படம் எடுத்தாரோ அந்த நபியின் மஸ்ஜிதிலும் அமர்ந்துத் தனது தவறை நினைத்து வருந்தித் தேம்பி தேம்பி அழுததாக அல் உகாள் பத்திரைகையின் செய்திக் கூறுகிறது . இந்த மார்கத்தை எதிர்ப்பவர்கள் சிந்திக்கத் தொடங்கும் போது இந்த மார்க்கம் தான் அவர்களுக்குப் புகலிடமாக மாறுகிறது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக் காட்டாக ஹோலன்ட் நாட்டைச் சார்ந்த அர்னோல்ட் திகழ்கிறார்! 









Source:http://adiraipirai.blogspot.ae/2013/10/blog-post_19.html

More Info:

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.