Tamil Islamic Media ::: PRINT
நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)

- கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.

திடீரென அந்த 8 வயது சிறுவன் கோபம் கொண்டவனாய் எழுந்து ஓடினான் கீழே கிடந்த ஒரு கல்லை கையில் எடுத்துக்கொண்டு தன் தந்தையின் அருகில் வந்து டாடி அந்த பொம்பளையை இப்பவே காட்டு அவளை நான் அடிக்காமல் விடமாட்டேன் என கத்த ஆரம்பித்து விட்டான்.

அதற்கான காரணத்தை கேட்டால் நான் வியந்ததை போல நீங்களும் வியந்துதான் போவீர்கள்.

அந்தப்பையனின் தந்தை உஹதுப்போரைப் பற்றியும் அதில் எம்பெருமானார்(ஸல்)அவர்களின் சிறிய தந்தை ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்கள் ஷஹீதான விஷயத்தையும்,

ஹழ்ரத் அபூசுப்யான்(ரலி)அவர்களின் மனைவி ஹிந்தா அவர்கள் நமதருமை நாயகம்(ஸல்)அவர்களின் மீதான கோபத்தினால்,

 பெருமானாரின் சிறிய தகப்பனார் ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட நிலையிலும் அவர்களின் நெஞ்சத்தை குத்தீட்டியால் பிளந்து ஈரல்குலையை வெளியில் எடுத்து அதை வாயில் வைத்து கடித்து துப்பிய விஷயத்தை சொன்னதும் தான் தாமதம்,

 திடீரென அந்த 8 வயது சிறுவன் கோபம் கொண்டவனாய் எழுந்து ஓடினான் கீழே கிடந்த ஒரு கல்லை கையில் எடுத்துக்கொண்டு தன் தந்தையின் அருகில் வந்து டாடி அந்த பொம்பளையை இப்பவே காட்டு அவளை நான் அடிக்காமல் விடமாட்டேன் என கத்த ஆரம்பித்து விட்டான்.

அவனது கோபத்தை கண்டு நான் மட்டுமல்ல, அவனது பெற்றோரும் வாய்பிளந்து நின்றோம்.

பின்னர் மலையின் அடிவாரத்தில் உள்ள காம்பவுண்ட் சுவருக்குள் மத்திய பாகத்தில் பாத்தி கட்டப்பட்ட ஒரு இடத்தை காண்பித்து அதுதான் எம்பெருமானாரின் சிறிய தந்தை ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்களின் அடக்கஸ்தலம் என அந்தப்பையனுக்கு அவனது தகப்பனார் அடையாளம் காண்பித்து கொடுத்தார்.

அடுத்து அவன் சொன்ன வார்த்தை டாடி,நான் பக்கத்தில் போய் பார்க்கணும் என்னை அங்கே கூட்டிப்போ என நச்சரிக்க ஆரம்பித்து விட்டான்.

உடனே அவனது தந்தையும் மலையிலிருந்து கீழே இறங்கி ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்களின் ஜியாரத்திற்கு அருகில் அந்தப்பையனை அழைத்து சென்றார்.

இந்தப்பையனின் வினோதமான நடவடிக்கையைப் பார்த்து நானும் அவர்களைப்பின் தொடர்ந்தேன்.அங்கே சென்றதும் சுற்றிலும் கட்டப்பட்டுள்ள காம்பவுண்டு சுவருக்குள் ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்களின் ஜியாரத்தும்,

உஹது யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்ட நபித்தோழர்களின் ஜியாரத்தும் இருந்தன.

காம்பவுண்ட் மதில் உயரமாக இருந்ததால் அந்தப்பையனுக்கு உள்ளே இருந்த காட்சிகள் தெரியவில்லைபோலும்,தன் தந்தையிடம் சொல்லி என்னை மேலே தூக்கிக்காட்டு என்றான்.

அவனை தூக்கி மதில் மேல் நிற்க வைத்தார் அவன் மதில் மேல் இருந்த இரும்பு கம்பிகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு உள்ளே உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.

நான் ஜியாரத்தை முடித்துக்கொண்டு அவனை பார்த்தேன்,எனதருமை மக்களே,சொன்னால் நம்பமாட்டீர்கள்.

அந்தப்பையனின் கண்களிலிருந்து தாரைத் தாரையாய் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது,அவனது தந்தை அதைப்பார்த்து என்னப்பா,என்னாச்சு?ஏன் அழுகிறாய்?எனக்கேட்டதும்,

 அந்தப்பையன் சொன்ன வார்த்தையை பாருங்கள்,டாடி பாவம் ரசூலுல்லாஹ்வின் சின்னவாப்பா, நமது ரசூலுல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள்.என தன் மழலைப்பேச்சில் சொன்ன விதம் என் நெஞ்சை நெகிழச்செய்தது.

எனதருமை சகோதரர்களே,நான் கண்ட காட்சியும்,அந்தப்பையனும்,அவனது பெற்றோரும் வேறுயாருமல்ல,மதீனாவாசிகள்தான்!

ஒவ்வொரு தலைமுறையினரையும் இஸ்லாத்தி

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.