Tamil Islamic Media ::: PRINT
வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெருநாள் - மார்க்க சட்டம்

அன்புடையீர்
 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
 
இறைவனின் அருளால் ரமலான் மாதத்தின் கடைசி பகுதியை வந்தடைந்திருக்கிறோம்.
 
கனத்த இதயத்தோடும், கண்ணீர் விழிகளோடும் அருள்பொழிந்த ரமலானை வழியனுப்ப தயாராகிக்கொண்டிருக்கிறோம்.
 
இனி நம் வாழ்வில் இந்த தருணங்கள் மீண்டும் வராது.
 
கழிந்த மணித்துளிகளில் கரைத்துவிட்டோம் ரமலானை, ரமலான் என்னிடம் விட்டுச்சென்றது எதுவோ? கேட்டுக்கொள்வோம் நம்மை நாமே .........
 
 
தற்போது தம் சொந்த பந்தங்களோடு ரமலான் பெருநாளைக்கொண்டாட துபை, குவைத், சவூதி போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருவோர் எண்ணிக்கை அதிகம். 


இந்த நிலையில் இந்தியாவில்  பெருநாளை எப்படி கொண்டாடுவது என்ற கேள்வி இருக்கும், அதற்கான மார்க்க சட்டம்?
 
இந்த ஆண்டும் இந்தியாவில் ரமாலான் முதல் பிறை 20/07/2012 (வெள்ளி மாலை) முதல் ஆரம்பமானது
 
மற்ற அரபுநாடுகளின் முதல் நோன்பு 19/07/2012 (வியாழன் மாலை) முதல் ஆரம்பமானது.
 
வளைகுடாவில் இருந்து வரும் சகோதரர்கள் வளைகுடா அடிப்படையில் பெருநாள் கொண்டாட வேண்டுமா அல்லது இந்தியா அடிப்படையிலா?
 
மார்க்க சட்டம்:
 
வளைகுடாவிலிருந்து வரும் சகோதரர்களுக்கு இன்றோடு (18/08/2012) 30 நாட்கள் நிறைவு பெற்று விட்டன. ஆனால், அவர்கள் இந்தியாவில் எப்பொழுது பெரு
 
நாள் கொண்டாடுகிறார்களோ அன்றைய தினம் தான் கொண்டாட வேண்டும்.
 
அது வரை அவர்கள் கண்டிப்பாக நோன்பு நோற்க்க வேண்டும் நோன்பை விடுவதற்கு அனுமதி இல்லை. (31 வது நோன்பாக இருந்தாலும் பரவாயில்லை)
 
ஏனெனில் திருக்குர் ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான், “ உங்களில் எவர் நோன்புகாலத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்”.
 
இந்த அடிப்படையில் நோன்பு நோற்கவேண்டும் இங்கு இந்தியாவில் என்று பெருநாள் கொண்டாடுகிறார்களோ அன்று பெருநாள் கொண்டாட வேண்டும்.
 
(அஹ்ஸனுல் பதாவா)
 
 
- ஹஸனீ

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.