Tamil Islamic Media ::: PRINT
அவளுக்காக நான் இதை மறக்கவே மாட்டேன்

மனிதர்களுக்கு சில நேரங்களில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை விட, தாங்கள் மதிக்கப்படுகிறோம் அல்லது கவனிக்கப்படுகிறோம் என்ற உணர்வே அதிகமாகத் தேவைப்படுகிறது.

கொடை என்பது வெறும் பணம் சார்ந்தது மட்டுமல்ல, ஒருவரை அக்கறையுடன் கவனிப்பதும் கூட ஒரு சிறந்த கொடைதான்.

ஆறுதல் என்பது சில நேரங்களில் உலகத்திலுள்ள அனைத்து செல்வங்களை விடவும் மேலானதாக இருக்கும்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீதான அந்த அவதூறு சம்பவத்தின் போது, அன்சாரிப் பெண்மணி ஒருவர் அவரிடம் வந்தார். அந்தத் துயரத்தின் பாரத்தினால் அவரால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. அதற்குப் பதிலாக, அவர் அன்னை ஆயிஷாவுடன் அமர்ந்து அழுதார்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 'அவர் எனக்காகச் செய்த இதை நான் மறக்கவே மாட்டேன்.'

  • மென்மை என்பது வலிமையை வென்றுவிடும்.
  • எனவே எப்போதும் மற்றவர்களுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடமாக இருங்கள்.
  • துக்கத்தில் இருப்பவரின் கண்ணீரைத் துடையுங்கள்,
  • ஏமாற்றப்பட்டவரின் தோளைத் தட்டிக் கொடுங்கள்,
  • எதையாவது இழந்தவரை அரவணைத்துக் கொள்ளுங்கள்,
  • காணாமல் போனவரைத் தேடிச் செல்லுங்கள்.


இதற்கெல்லாம் பெரிய வீரச் செயல்கள் எதுவும் தேவையில்லை, ஒரு மனிதனாக இருந்தால் மட்டும் போதும்!

رسالل من النبي صلى الله عليه وسلم سلم அத்ஹம் ஷர்காவி

தமிழில் : இஸ்மாயில் ஹஸனீ



The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.