| உடன்பிறப்பே...!மார்க்க உடன்பிறப்பே...!!
 
 அண்ணலார் வழியில்
 அடிபிறழாது வாழ்வோம்
 பொன்னான ஷரீஅத்தை
 இன்னுயிராய் மதிக்கும் (உடன்...
 
 ஷரீஅத்தைக் காக்க
 சதிகாரர்த் தோற்க
 சகோதர உணர்வில்
 சங்கமித்து உழைப்போம் (உடன்...
 
 ஷரீஅத்தின் மாண்பை
 நாட்டில் குறைக்க
 தினந்தோறும் கோர்ட்டின்
 கதவைத் தட்டுகிறார்
 நாமிணைந்தே தடுப்போம் (உடன்...
 
 காவியும் கலவரம்
 காணமுற்பட்டால்
 கடல்அலையென திரண்டு
 நின்றிடுவோம்!
 
 சோதனையும் நம்மைச்
 சூழ்ந்துவிட்டால்
 சுனாமியாக வெகுண்டு
 தடுத்திடுவோம்!
 
 அரைடவுசர் வீழ்த்த
 அறம்வழி தன்னில்
 போராட்டம் போதாது;
 சட்டப்படி நாமும்
 சதிகள் முறியடிக்க முனைவோம்
 (உடன்...
 
 துன்பங்கள் கோடி
 துயரங்கள் கோடி
 நமைத்தேடி வரினும்
 நாயனை நம்பி
 நடைபோடத் துணிவோம் (உடன்...
 
 கடலில் ஆடும் கப்பல்களை
 கலங்கரை விளக்கம்
 கரைசேர்க்கும்;
 களம்காணப் புறப்படும் நம்மை
 குர்ஆனும் தொழுகையும்
 கைதூக்கும் (உடன்...
 
 பாவிகாவியின் பாதகத்தால்
 பாதிப்பைச் சந்திக்கும்
 சமுதாயம் பாதுகாப்புத்
 தேடுவதும் நம்மிடம்தான் (உடன்...
 
 ஆட்டம்பாட்டம் மறந்து
 ஆசாபாசம் துறந்து
 இம்மைமறுமை
 வெற்றியைத் தேடி...
 
 சமுதாயத்தைக் காப்போம்
 சந்ததியைக் காப்போம்
 ஷரீஅத்தைக் காப்போம் (உடன்...
 -----------
 பாடல் : மிஸ்கீன்
 M.ஷாஹுல் முஸ்தபா.
 பாடியவர் : காயல் குயில்
 S.A.காஜா முய்னுதீன் முத்தொலியான்
 |