அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?

( Dr. K.V.S. ஹபீப் முஹம்மத் )

‘தீமைகள் செழித்து வளர நல்லவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே. அது அவர்கள் மெளனமாக இருப்பதே ஆகும்’ எட்மண்ட் பர்க்.

‘உண்மையை அறிந்த பின்னரும், உண்மையைப் பேச மறுக்கும் நாளே நாம் இறக்கும் நாள்’ மார்டின் லூதர் கிங்.

இன்று உலகில் வன்முறைகளும், அநீதிகளும், குற்றங்களும் தலை விரித்தாடுகின்றன. ஆனால், இவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். தம்மையோ, தமது சமூகத்தையோ பாதிக்காத வரையில் எவரும் அநீதிகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால் அவர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டாலோ, மற்றவர்கள் தங்களுக்காகக் குரல் எழுப்பவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எழும் சினம் போலவே, பாதிக்கப்படாதவர்களுக்கும் ஏற்படாத வரை, அநீதிகள் ஒருபோதும் ஒழியாது. அநீதிக்கு எதிராகப் பாதிக்கப்படாதவர்கள் எழுப்பும் குரல், அதிகத் தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. பிறர் தாக்கப்படும் போது நாம் குரல் எழுப்பினால்தான், நாம் தாக்கப்படும்போது பிறர் நமக்காகக் குரல் எழுப்புவார்கள் என்பதை எந்தச் சமூகமும் மறந்து விடக்கூடாது.

‘அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைக் கடமை’ என இஸ்லாம் கூறுகின்றது. முஸ்லிம்களை மட்டுமின்றி, உலக மாந்தர் அனைவரையும் அழிவிலிருந்தும், அநீதியிலிருந்தும் பாதுகாக்க வேண்டும் என்பது முஸ்லிம்களுக்கு இறைவன் இட்ட ஆணையாகும்.


“முஸ்லிம்களே ! மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமுதாயத்தினராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள், தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள்.”

( குர்ஆன் 3:110 )


“நன்மையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவ வேண்டும். தீயவற்றிலிருந்து தடுத்த வண்ணம் இருக்க வேண்டும். எவர்கள் இப்பணியைப் புரிகின்றார்களோ, உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்.”

( குர்ஆன் 3:104 )


மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் நன்மையை ஏவி, தீமையை விலக்கும் சமுதாயமே சமுதாயம் என்றும், வெற்றி பெற்ற சமுதாயம் என்றும் நமக்கு உணர்த்துகின்றன.


அநீதிகளுக்கு எதிராக நம்மால் முடிந்த அளவுக்கு போராட வேண்டும்.


‘தீமையைக் கண்டால் கைகளால் தடு ! அது முடியாத போது நாவினால் தடு ! அதுவும் முடியாத போது மனத்தளவில் தடு ! ஆனால் அதுவோ இறைநம்பிக்கையின் தாழ்நிலையாகும்’ என்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். எனவே அவரவர் சக்திக்கேற்ப அநீதிகளைக் களைவதில் அக்கறை கொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருப்போர் தமது பதவியைப் பயன்படுத்தி அநீதிகளை ஒழிக்க வேண்டும். சட்டம், நீதித்துறை, இராணுவம், காவல்துறை ஆகியவற்றின் உதவியோடு அநீதிகளைக் களைய வேண்டும். அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர் தொலைக்காட்சியில் உரையாற்றுதல், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுதல், அறிக்கை வெளியிடுதல் ஆகியவற்றோடு மட்டும் நிறுத்திக் கொள்வது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் கோழைச் செயலாகவே கருதப்படும்.

பொதுமக்கள், அறிவு ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், மனித நேயர்கள், மனித உரிமை இயக்கத்தினர் ஆகியோர் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். ‘கொடுங்கோல் ஆட்சியாளர்க்கு முன் உண்மையை எடுத்துரைப்பது மாபெரும் அறப்போர் (ஜிஹாத்) ஆகும்’ என்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

அநீதிக்கு எதிராக மக்கள் எழுப்பும் குரல், ஆதிக்க சக்திகளைக் கலக்கமடையச் செய்யும் சக்தி படைத்தது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு மூலையில் நடக்கின்ற ஒரு அநீதிக்கு எதிராக, தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில், ஒரு சிறிய எண்ணிக்கையினர் குரல் எழுப்புவதால் என்ன பயன் என்று கருதிவிடக்கூடாது. ஜாதி, மதம், மொழி, இனம் பாராது அனைத்து மக்களும் ஓரணியில் திரள வேண்டும். தீயவர்கள் தீமை புரிவதற்காகக் கூட்டணி அமைத்துக் கொள்ளும் போது, நன்மைக்காக நல்லவர்கள் ஒன்று சேரத் தயங்குவதேன்?

அநீதிக்கு எதிரான குரல் வலுவாகவும், தொடர்ந்தும் ஒலிக்க வேண்டும். ஆதிக்ககாரர்களை திகில் அடையச் செய்யும் அளவிற்கு எதிர்ப்புப் போராட்டமும், விளக்கக் கூட்டங்களும், பேரணிகளும் நடைபெற வேண்டும். சிறு பிரச்சார நூல்கள், அச்சு, மின்னணு ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம் பிரச்சனைகளின் உண்மை நிலைப் பற்றி, மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும். அமெரிக்க மக்களுக்கு, அமெரிக்க அரசு செய்து வரும் பல அடவடித்தனங்களைப் பற்றி தெரியாது. பாலஸ்தீனர் பிரச்சினையில் இஸ்ரேல் அரசு நியாயமாக நடந்து கொள்வதாகவும், பாலஸ்தீனர்களே அநீதிகளைப் புரிவதாகவும், அமெரிக்க மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். இதுபோலவே பல அரசுகள் தாம் செய்யும் தவறுகளை மக்கள் அறியாதவண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள்.

அநீதிகள் புரிபவர்கள் நமது சமூகத்தவராயினும், அவர்களை எதிர்த்து நாம் குரல் எழுப்ப வேண்டும். எனது தேசம் எது செய்தாலும் ஆதரிப்பேன் (My nation right or wrong) என்பது இன வெறியாகும்.


’ஒருவன் தன் சமூகத்து மக்களை நேசிப்பது இன வெறியாகுமா?’ என ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினார். அதற்கு நபிகளார் அவர்கள், ‘இல்லை, மாறாக தன் சமூகத்தார் கொடுமை செய்ய முற்படும் போது, அவர்களுக்குத் துணை புரிவது தான் இனவெறி’ என்றார்கள்.

அடுத்தவர் செய்யும் தவறுகளை ஆவேசமாகக் கண்டிக்கிறோம். ஆனால் நமது நாடு, நமது சமூகம் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றோம். தமது சமூகத்தைக் கண்டிப்பது தேசத் துரோகம், மதத் துரோகம், இனத் துரோகம் என்று கருதுகிறோம். ஆனால், இந்த இனவெறிச் சிந்தனை அவர்களையே அழித்து விடும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு தட்டிக் கேட்கப் படாத மனிதர்கள் அழிந்து போனது போல, நாடுகளும், சமூகமும் அழியும்.


‘எவன் அநீதியான விஷயத்தில் தன் சமுதாயத்தினருக்கு உதவி புரிகின்றானோ அவன் கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்துக் கொண்டிருப்பவனைப் போன்றவன் ஆவான். அந்த ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழ்வான்’ என்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல் : அபூதாவூது)

அநீதிக்கு எதிராக வெளிநாட்டவர் எழுப்பும் குரலைவிட உள்நாட்டினர் (அதே சமூகத்தவர்) எழுப்பும் குரலே வலுமிக்கது. ஆட்சியாளர்களும், அக்கிரமக்காரர்களும் தமது சமூகத்தினரின் எதிர்ப்புக்கே அதிகம் அஞ்சுகின்றனர்.

இன்று உலக மக்கள் அதிகம் எதிர்க்க வேண்டியது வல்லரசுகளின், குறிப்பாக அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மையை உலகில் எவருக்கும் அஞ்ச மாட்டோம். எந்தத் தர்மத்திற்கும் கட்டுப்பட மாட்டோம். எந்த நாட்டையும், எந்த வேளையிலும், எந்த வகையிலும் தாக்குவோம். அங்குள்ளவர்களைச் சிறை பிடிப்போம். சித்திரவதை செய்வோம் என செயல்படுகின்றன. ஐ.நா. சபை உலக வங்கி, சர்வதேச நிதியம், சர்வதேச அணுசக்தி கழகம் ஆகிய அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, ஒரு தாதாவைப் போல் நடந்து கொள்கின்றன. ஐ.நா. சபை என்பது அமெரிக்க ஐக்கிய சபை ஆகிவிட்டது. உலகத்தைப் பாதுகாக்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு சபை, அமெரிக்க – ஐரோப்பிய நலன்களைப் பாதுகாக்கும் சபையாகி விட்டது. தன்னிச்சையாக செயல்படுதல், ஏகாதிபத்தியம், இரட்டை நிலை ஆகியவையே வல்லரசுகளில் செயல்பாட்டின் அடிப்படைகள்.

நமது நாடு உட்பட, உலகின் பல நாடுகள் வல்லரசுகளின் அரசு பயங்கரவாதத்தை கண்டிக்க மறுக்கின்றன. வல்லரசுகளிடமிருந்து கிடைக்கும் கடன், தொழில்நுட்ப உதவி, ஆயுத விற்பனை ஆகியவை இவர்களை மெளனமாக்கி விடுகின்றன. வல்லரசுகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்து ஐ.நா. பாதுகாப்பு சபை, பொதுச்சபை, அணுசக்திக் கழகம் ஆகியவற்றில் வல்லரசுகளுக்கு ஆதரவாக ஓட்டுப் போடுகின்றன. காந்திஜியின் அஹிம்சை, நேருஜியின் அணிசாராக் கொள்கை ஆகியவற்றைப் பின்பற்றும் நமது நாட்டின் நிலையே இப்படி என்றால், மற்ற நாடுகளின் நிலையைப் பற்றிப் பேச வேண்டியது இல்லை. அரபுக்களை நசுக்கி வரும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவைக் கண்டிக்க அரபு நாடுகளோ தயாராக இல்லை.


ஆகவே இத்தகையத் தருணங்களில் பொதுமக்கள், அறிவு ஜீவிகள், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள், மதம் சித்தாந்தம், நாடு ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் பிரச்சனையின் தீவிரத்தைக் குறைப்பதோடு, காலப்போக்கில் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் வழிவகுக்கும்.

 

நன்றி : நர்கிஸ் - ஏப்ரல் 2014








1 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்

வளைந்து போன உன் காரியங்கள் நேராகும்; உன் வலிகள் விரைவில் குணமாகும்.

2 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?

புத்தாண்டு இரவு தேவாலயங்களிலும் கோவில்களிலும் சிறப்பு பிரார்தனைகள் நடைபெற்றன. கடற்கரையில் மக்கள் வெள்ளம் புதிய ஆண்டின் துவக்கத்தை வரவேற்று மகிழ்ந்தது. ஆனால் இன்னொரு பக்கம் நடக்கக் கூடாதவைகள் எல்லாம் அரங்கேறியது.

3 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?

பல்வேறு தரப்பட்ட வேறுபட்ட வித்தியாசமான கொள்கையாளர்களுக்கு மத்தியில், இறைமறையும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், நபித்தோழர்களும், இமாம்களும் எந்த கொள்கைக் கோட்பாட்டைக் காட்டியுள்ளார்களோ அவற்றை ஏற்று நம்பி, செயல்படுகின்ற கூட்டமே சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்கள் ஆவர்.

4 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.

ஒரு ஜனாஸா கப்ரை நோக்கி சுமந்து செல்லப்படும் காட்சியைக் கண்ட இமாம் ஹஸன் அல்பஸரி அவர்கள் தன் பக்கத்திலிருந்த மனிதரிடத்தில் ”மரணித்த இந்த மனிதருக்கு மறுபடி வாழ இறைவன் சந்தர்ப்பம் கொடுத்தால் பழையபடி பாவங்கள் செய்வானா?” எனக் கேட்டார்கள்.

5 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!

மசூதியில் தொழுகை நடத்த வருபவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. அதிக கட்டணம் கொடுப்பவர்களுக்கு முதல் வரிசையில் இடம் என்பது போன்ற சலுகைகளும் இல்லை.

6 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
7 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
8 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
9 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
10 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
11 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
12 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
13 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
14 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
15 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
16 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
17 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
18 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
19 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
20 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
21 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
22 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
23 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
24 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
25 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
26 எது வணக்கம்..?
27 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
28 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
29 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
30 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
31 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
32 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
33 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
34 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
35 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
36 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
37 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
38 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
39 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
40 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
41 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
42 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
43 மனைவியை_நேசிங்கள்..
44 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
45 அம்மா! அம்மா!
46 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
47 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
48 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
49 இமாம்களும் மத்கபுகளும்.
50 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
51 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
52 பராஅத் இரவின் சிறப்புகள்
53 வாப்பா!
54 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
55 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
56 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
57 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
58 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
59 இதிலென்ன வெட்கம்?
60 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
61 பழையன கழிதலும் புதியன புகுதலும்
62 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
63 கற்பில் கவனம் தேவை
64 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
65 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
66 இஸ்திஃகாராவின் சிறப்பு
67 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
68 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
69 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
70 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
71 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
72 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
73 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
74 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
75 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
76 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
77 இறுக்கமும் இரக்கமும்
78 இஷா தொழுகையும் இரவு உணவும்
79 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
80 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
81 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
82 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
83 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
84 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
85 பெயர்களை நினைவில் வைப்போம்
86 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
87 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
88 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
89 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
90 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
91 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
92 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
93 ஒரு 2.5 கதை
94 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
95 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
96 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
97 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
98 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
99 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
100 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
101 குறைகளை மறைத்தல்
102 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
103 நல்ல பெண்மணி
104 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
105 💥 யார் அந்த மாமனிதர்..?
106 ஈர்ப்பை விதைப்போம்!
107 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
108 யார் இந்த துலுக்கன்?
109 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
110 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
111 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
112 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
113 நிம்மதி - சிறுகதை
114 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
115    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
116 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
117 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
118  வாழ்க்கை வாழ்வதற்கே !
119 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
120 விற்கப்படும் மார்க்கம்
121 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
122 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
123 பார்வைகள் பலவிதம் !
124 நேர மேலாண்மை / திட்டமிடல்
125 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
126 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
127 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
128 தந்தைகளே! கவனியுங்கள்
129 வரலாறு புகட்டும் பாடம்
130 அல்குர்ஆன் என்னும் மதுரம்
131 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
132 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
133 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
134 நாம் தான் முயல வேண்டும்.
135 உணரப் படாத தீமை சினிமா
136 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
137 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
138 கற்பா? கல்லூரியா?
139 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
140 கசாப்புத் தொழில் சிறந்தது....
141 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
142 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
143 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
144 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
145 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
146 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
147 என் ஹிஜாப் என் உரிமை!!!
148 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
149 முகமாகும் பெண்கள்!!
150 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
151 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
152 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
153 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
154 செல்போன்கள்... ஜாக்கிரதை!
155 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
156 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
157 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
158 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
159 ஈமானே-உன் விலையென்ன?
160 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
161 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
162 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
163 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
164 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
165 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
166 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
167 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
168 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
169 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
170 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
171 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
172 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
173 அறிவைத் தேடுவோம்!
174 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
175 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
176 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
177 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
178 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
179 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
180 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
181 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
182 “வேர்கள்” வரலாறு!
183 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
184 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
185 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
186 மனிதனின் தேவை ! – மன அமைதி
187 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
188 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
189 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
190 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
191 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
192 பேச்சு,மெளனம்
193 ஜனாஸா - மைய்யத்
194 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
195 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
196 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
197 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
198 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
199 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
200 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
201 வலிமார்கள் என்பவர்கள் யார்?
202 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
203 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
204 மனித குல விரோதி
205 எனது பெயர் ஜனாஸா!
206 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
207 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
208 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
209 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
210 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
211 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
212 தமிழரும் இசுலாமியரும்
213 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
214 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
215 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
216 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
217 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
218 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
219 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
220 கற்பனைகளும் இஸ்லாமும்
221 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
222 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
223 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
224 மது ஒரு பெரும் பாவம்
225 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
226 பெற்றோர்களைப் பேணுவோம்!
227 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
228 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
229 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
230 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
231 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
232 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
233 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
234 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
235 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
236 மறுமை வாழ்வை நேசிப்போம்!
237 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
238 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
239 சுதேசி சிந்தனைகள்.......
240 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
241 கல்வி நல்லோர்களின் சொத்து!
242 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
243 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
244 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
245 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
246 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
247 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
248 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
249 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
250 அறிவைத் தேடுவோம்!
251 ஆக்காதீர் ஆசனங்களாக
252 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
253 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
254 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
255 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
256 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
257 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
258 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
259 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
260 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
261 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
262 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
263 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
264 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
265 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
266 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
267 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
268 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
269 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
270 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
271 விசுவரூபம் ஒரு விளக்கம்
272 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
273 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
274 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
275 கண்ணாடிகள் கவனம்
276 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
277 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
278 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
279 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
280 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
281 கருத்து வேறுபாடுகள்.
282 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
283 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
284 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
285 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
286 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
287 ஓ! என் இளைய சமுதாயமே!
288 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
289 வீண் செலவு வேண்டாமே